போதைப்பொருளுடன் கைதான பல்கலைகழக மாணவனுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் போதைப்பொருளுடன் கைதான நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட போதைத் தடுப்புப் பொலிஸ் பிரிவினருக்குக்கு நேற்று(16) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மருத்துவ பீட இரண்டாம் வருட மாணவனை கைது செய்து சோதனையிட்ட போது, மாணவனின் உடமையில் இருந்து, 33 கிராம் 230 மில்லிக்கிராம் போதைப்பொருள்  கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் ஊவா மாகாணத்தை சேர்ந்த பெரும்பான்மையின மாணவன் எனவும், மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று(17) யாழ் நீதவான் நீதிமன்றில் மாணவனை முற்படுத்திய நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் மன்று உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *