மன்னார் பண்டிவிரிச்சான் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

மன்னார் பண்டிவிரிச்சான் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி கடந்த 15 மற்றும் 16ஆம் திகதி இடம்பெற்றது.

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் தின நினைவேந்தல் எதிர்வரும் 27ஆம் திகதி வடக்கு கிழக்கு மற்றும் தமிழர் தாயக பகுதிகளில் தமிழ் மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் நினைவு நிகழ்வுக்கு தயாராக ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்வதற்கான சிரமதான பணிகள் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *