காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு இது வரை நீதி கிடைக்கவில்லை – வைத்தியர் ஸ்ரீநாத்

கடந்த கால அரசாங்கத்துடன் இப்பகுதியில் உள்ள அமைச்சர்களும் தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கு உடந்தையாக இருந்தார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.

ஜனாதிபதி தமிழ் மக்களின் அரசியல் கைதிகளின் காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர் விவகாரம் போன்றவற்றிக்கு நீதி கேட்டிருந்தோம். இவ் விடயங்கள் சம்மந்தமாக தொடர்ச்சியாக பேசுவோம்.

அதேவேளை பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகள் பற்றியும் கேட்டிருந்தோம். இதுவரை அதற்கான பதிலும் கிடைக்கவில்லை.

பேரினவாத கட்சிகள் எமது வாக்குகளை குறிவைத்து பணியாற்றுகின்றனர். இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக எம்மவர்களே களம் இறக்கப்படுகிறார்கள்.

அபிவிருத்தி என்ற போர்வையில் எமது வளங்கள் திட்டமிட்டு அபகரிக்கப்படுகின்றன வன இலாகா என்ற போர்வையில் இதற்காக தற்போதைய புதிய அரசும் துணை போகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *