யாழ் குருநகர் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பாததால் சக மீனவர்கள் தேடுதலில் ஈடுபட்டுவந்த நிலையில் தமிழக காவல் படையினரால் குறித்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்
இராமநாதபுரம் தொண்டி மீன்பிடிதுறைமுகத்திற்கு அண்மையில் படகொன்று தத்தளித்ததை அவதானித்த காவல் படையினர் அவர்களை படகுடன் மீட்டு கரை சேர்த்தனர்.
சம்மந்தப்பட்ட கடற்தொழில் அமைச்சு இரண்டு மீனவர்களின் குடும்பங்களை கருத்தில் கொண்டு விரைவாக அவர்களை மீட்குமாறு சக மீனவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்

