இன்றைய நாளுக்கான இராசி பலன்கள்

விசுவாவசு வருடம் சித்திரை 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

நட்சத்திரம்: இன்று மாலை 6.19 வரை பூசம் பின்பு ஆயில்யம்

திதி: இன்று பிற்பகல் 1.20 வரை சப்தமி பின்பு அஷ்டமி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 7.30 – 8.30, மாலை 3.30 – 4.30

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மாலை 12.00 – 1.30

குளிகை: மாலை 3.00 – 4.30

கௌரி நல்ல நேரம்: காலை 10.30 – 11.30, மாலை 1.30 – 2.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்

மேஷம்

புதிய முயற்சிகள் வெற்றி தரும். மூன்றாம் நபரால் ஏற்பட்ட தங்களின் குடும்பப் பிரச்சினை தீரும். கொடுக்கல் வாங்கல் சீராகச் செல்லும். பிரபலங்களுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். அவர்களால் நன்மைகள் உண்டு. தொலைந்து போன பொருள் கிடைக்கும். விற்பனை பிரதிநிதிகளுக்கு ஏற்றவாறு தங்களின் அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

ரிஷபம்

தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும். வெளியூர் பயணம் செல்ல டிக்கெட் புக் செய்வீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமண தகவல் மையத்தில் இருந்து நல்ல வரன் கிட்டும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த இலாபத்திற்கு மேல் இலாபம் உண்டாகும். திருமணம் மற்றும் கிரகபிரவேசத்திற்கு அழைப்பு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மிதுனம்

நினைத்துப் பாராத ஒரு நல்ல செய்தி வந்தடையும். சகோதர, சகோதரி வழியில் மனஸ்தாபம் ஏற்படும் கொஞ்சம் விட்டுக்கொடுப்பது நல்லது. தியானம் மேற்கொள்வது டென்ஷனை குறைக்கும். விரும்பிய வரணை கைப்பிடிப்பீர்கள். தங்கள் பெற்றோர்களின் உடல் நலத்தை பார்த்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

பெண்களுக்கு உஷ்ண பாதிப்பு ஏற்படும். குளிர்ந்த பொருட்களை உட்கொள்ளுதல் நன்மை தரும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவர். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் நன்கு படிப்பர். காதலர்களுக்கு பெரியவர்களின் சம்மதம் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் நன்மையைத் தரும். மார்கெட்டிங் பிரிவினர்கள் தாங்கள் இலக்கினை எட்டுவீர்கள். வழக்கு சாதகமாகும். பல்வலி வந்து போகும். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

கன்னி

ஆவணங்களை பத்திரப்படுத்துவீர்கள். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். வெளிநாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். மனைவி வீட்டாரிடம் நல்லுறவு ஏற்படும். தம்பதிகளிடம் அன்யோன்யம் மிகும். நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள். சுப காரியம் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

துலாம்

வீட்டில் மகிழ்ச்சி சூழும். இன்று குடும்பத்துடன் ஷாப்பிங் மாலுக்கு சென்று வருதல், திரைப்படம் பார்த்தல் போன்றவைகளில் நேரத்தை செலவழிப்பீர்கள். எண்ணெய் வியாபாரம் இலாபம் தரும். தம்பதிகள் விட்டுக்கொடுப்பர். பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும். பிள்ளைகளின் மேல் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

விருச்சிகம்

விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். தேகம் மின்னும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரம் செழிப்புறும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை கூடும். நீண்ட நாட்களாக தங்கள் பெற்றோர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர்களுக்கு உடல் நலம் சீராகும்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

தனுசு

மூலம், பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை சந்திப்பதை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

மகரம்

வியாபாரிகளுக்கு முதல் போடுவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். செலவு கூடும். சிக்கனம் தேவை. புதுநபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். உடல் பொலிவினைக் கூட்டும் பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

மீனம்

பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேருவர். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மனம் விட்டு பேசுவீர்கள். கடன் தொல்லை தீரும். தேகம் புதுப்பொலிவுடன் காணப்படும். திடீர் வெளியூர் பயணம் உண்டு. உறவினர்களை பார்த்து மகிழ்வீர்கள். உடல் நலம் சிறக்கும். உங்கள் துணை தங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்பர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *