நாளை மறுதினம்(06) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் இன்று(04) காலை 09.00 மணிக்கு நேரடி ஆய்வு செய்யப்பட்டது.
இக் கள ஆய்வில் பாதுகாப்பு ஏற்பாடுகள், மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலனோன்பு வசதிகள் மற்றும் மின்சார வசதிகள் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இக் கள ஆய்வில் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ. சசீலன், தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதாரம் அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் திரு. பொ. தயானந்தன், மேலதிக அரசாங்க அதிபரும் (காணி) நலனோம்பல் உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.க. ஸ்ரீமோகனன், வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு ஏ. ஜே. ஹாலிங்க ஜெயசிங்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



