ஆரம்பத்தில் குறுஞ்செய்தி மட்டுமே அனுப்பும் தளமாக இருந்த வாட்ஸ்அப் செயலி, பின்னர் பல்வேறு அப்டேட்களை கொடுத்தது.
வாட்ஸ்அப்பில் ஓடியோ, வீடியோ அழைப்பு வசதி, பாடல்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வசதி என வாட்ஸ்அப் சமீபத்திய ஆண்டுகளில் கொண்டு வந்த அப்டேட்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
வாட்ஸ்அப் சந்தையில் தனக்கு உள்ள போட்டியை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களைக் கவரவும் தொடர்ச்சியாக இத்தகைய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு அப்டேட் வந்துள்ளது. அதாவது, வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து வெளியேறும் போது, குழுவில் உள்ள பிறருக்கு தெரியாமல் வெளியேறும் வசதி அறிமுகம் ஆகியுள்ளது.
தற்போது வரை குழுவில் இருந்து வெளியேறினால், குழுவில் இருக்கும் பிற உறுப்பினர்களுக்கு வெளியேறிய உறுப்பினர் யார் என்பது காட்டிவிடும்.
இதனை மாற்றி, யாருக்கும் தெரியாமல் வெளியேறும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனம் கொண்டு வந்த இந்த வசதி, பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

