ஹங்குரான்கெத்த பகுதியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர், நிலச்சரிவால் சேதமடைந்த வீட்டின் இடிபாடுகளில் இருந்து பணம் மற்றும் தங்க நகைகளை மீட்டு, அவற்றை உரிய உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இடிபாடுகளுக்கு மத்தியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, ரூ. 300,000 ரொக்கம் மற்றும் சுமார் ரூ. 50 இலட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கண்டுபிடித்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

