இன்று(30) மாலை 6 மணி அளவில் முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணிகளை ஏற்றிப் பயணித்த தனியார் பேருந்து மீது சுண்டிக்குளம் சந்திப்பகுதியில் கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் பின்பகுதி கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் பேருந்தில் பயணித்தவர்களும் வீதியின் நடுவே இறக்கப்பட்டு மற்றொரு பேருந்து மூலம் குறித்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

