மட்டக்களப்பு வாவியை அண்மித்துள்ள களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு மற்றும் மகிளுர் உள்ளிட்ட பல கிராமியக் குளங்கள் நிரம்பியுள்ளன.
இந்நிலையில் மட்டக்களப்பு வாவியிலுள்ள முதலைகள் கிராமியக் குளங்களுக்குள் வந்துள்ளன. இவ்வாறு குளங்களில் இருக்கும் முதலைகளில் இரவு வேளைகளில் வீதிகளில் நடமாடுவதை அவதானிக்க முடிகின்றது.
எனவே, இரவு வேளைகளில் அப்பகுதிகளில் நடமாடுபவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

