மட்டக்களப்பில் 12 மணித்தியாலயத்தில் 3 பேர் தற்கொலை

மட்டக்களப்பு அரசடியில் வர்த்த நிலையங்களுக்கு முன்னால் நாட்டப்பட்ட விளம்பரப் பலகையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று(02) அதிகாலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன் மாவட்டத்தில் கடந்த 12 மணித்தியாலயத்தில் ஒரு யுவதி உட்பட 3 பேர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு 7ம் பிரிவு சமுர்த்தி வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய முகுந்தன் சந்தோஷ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த இளைஞன் கொழும்பில் தொழில் செய்துவரும் நிலையில் சம்பவ தினமான நேற்று கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு அதே பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களுடன் பிரயாணித்த நிலையில் மட்டக்களப்பில் குறித்த இளைஞன் நேற்று நள்ளிரவு இறங்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட வர்த்தக நிலையத்தில் சென்று அங்கு கடமையாற்றும் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை வாங்கி தாய்க்குது தொடர்பு கொண்டுள்ளார்.

அதன் பின்னர் வர்த்தக நிலையம் இரவு 12.00 மணிக்கு மூடிவிட்டு சென்றனர்.

இந்த நிலையில் இன்று(02) அதிகாலையில் 6.00 மணிக்கு குறித்த வர்த்தக நிலைய கட்டிடத் தொகுதியில் நிர்மானிக்கப்பட்ட விளம்பர பலகை கம்பியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சம்பவ இடத்துக்கு தடவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன்  திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதுடன் தடவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த நபர் அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிடத்திற்கு தீயிட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.

பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி வைத்தியசாலை உள்வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று(01) இரவு -700 மணியளவில் 22 வயதுடைய யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அதே பொலிஸ் பிரிவிலுள்ள மயிலம்பாவெளி பிரதேசத்தில்  ஒரு பிள்ளையின் தந்தையான 22 வயதுடையவர்  தூக்கில் தொங்கிதற்கொலை செய்துகொண்டார்.

குறித்த நபர் கடந்த 3 மாதங்களாக ஒரு தொழிலும் இல்லாது வந்த நிலையில் மது அருந்துவதற்கு மனைவியிடம் ஆயிரம் ரூபா பணம் கோரியதாகவும் அவரிடம் குழந்தைக்கு பால் வாங்க 200 ரூபா மட்டும் இருந்துள்ளதாகவும் இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று குறித்த நபர் 3 முறை கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும் அதன் பின்னர் மனைவி குழந்தையுடன் உறவினர் வீட்டுக்கு சென்ற நிலையில் தாயாருக்கு தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்து விட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரு சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நேற்று முதலாம் திகதி இரவு 7 மணியில் இருந்து இன்று அதிகாலை 6.00 மணி வரை மாவட்டத்தில் 3 பேர் தற்கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *