மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று(04) நடைபெற்றது. இந்த போட்டியில் முன்னணி வீரரான கேஸ்பர் ரூட், பிரிட்டனின் ஜேக் டிராபர் உடன் மோதினார்.
இந்த போட்டியின் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் கேஸ்பர் ரூட்டும், 2ஆவது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ஜேக் டிராபரும் கைப்பற்றினர்.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3ஆவது செட்டில் அபாரமாக செயல்பட்ட கேஸ்பர் ரூட் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜேக் டிராபை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றார்.