நாளை(06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் மேற்கொள்ளுவதற்கு சட்டத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது,
வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் மேற்கொள்ளுவதற்கு சட்டத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பின்வருமாறு ;
- கையடக்கத் தொலைபேசிகளை பாவித்தல்
- புகைப்படம் எடுத்தல்
- காணொளி எடுத்தல்
- ஆயுதங்களை வைத்திருத்தல்
- புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல் அல்லது போதைப்பொருட்கள் பாவனை செய்தல்
- மதுபானம் அருந்துவிட்டு அல்லது போதைப்பொருட்கள் பாவனை செய்துவிட்டு வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் வருகை தருதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.