மன்னார் மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு

மன்னார்  மாவட்டத்தில் உள்ள  05 உள்ளூராட்சி சபைகளுக்குமான வாக்குப் பெட்டிகள் இன்று(05) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இருந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை, மன்னார், மாந்தை மேற்கு, நானாட்டான், முசலி ஆகிய பிரதேச சபைகள் உள்ளடங்களாக 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குப் பெட்டிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் வைபவ ரீதியாக இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 114 வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை 11 மணி முதல் மாவட்ட செயலகத்தில் இருந்து வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில்  ஐந்து சபைகளில் 103 சபை உறுப்பினர்களை தெரிவு செய்ய  114 வாக்களிப்பு நிலைகளில் 91 ஆயிரத்து 373 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *