கிராமம் தோறும் மக்களோடு மக்களாக” எனும் தொனிப்பொருளில் மக்கள் காலடிக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றைத் தீர்க்கும் செயற்பாட்டின் அடிப்படையில் அட்டாளைச்சேனை 08 (கோணாவத்தை) பிரதேச மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பான மக்கள் சந்திப்பு நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் தலைமையில் நேற்று(04) நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர்களான அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் அமைப்பாளர் றியா மசூர், ஏ.எல்.பாயிஸ், கட்சியின் அட்டாளைச்சேனை 08 ம் பிரிவு அமைப்பாளர் எஸ்.ஐ.றியாஸ், அந்-நூர் மகா வித்தியாலய அதிபர் என்.கே.எம்.மிஸ்வர், அட்டாளைச்சேனை 08ம் பிரிவு கிராம சேவகர் எம்.அஸ்லம் சஜா, அட்டாளைச்சேனை 08 ம் பிரிவு கிளைக்குழுத் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், விளையாட்டுக் கழக வீரர்கள், கோணாவத்தை பிரதேச பள்ளிவாசல் நிருவாக சபையினர், முக்கியஸ்தர்கள் மற்றும் மீனவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


