இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

நாட்டில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

கடந்த 02ஆம் திகதி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாயாக இருந்தநிலையில் இன்று(05) 3,000 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, 359,000 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 332,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,875 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,500ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *