திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக (காணி) ஸ்ரீபதி பதவியேற்பு

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபராக (காணி) திருமதி ஜெ. ஸ்ரீபதி இன்று(05) உத்தியோகப்பூர்வமாகத் தனது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்போது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார கலந்துகொண்டு, புதிய மேலதிக அரசாங்க அதிபருக்கு (காணி) வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் அவரை வரவேற்றார்.
இவ்வரவேற்பு நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தம்பலகாமம் பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருமதி ஜெ.ஸ்ரீபதி இலங்கை நிருவாக சேவையின் தரம் ஒன்றை சேர்ந்தவராவார். இதற்கு முன்னர் குச்சவெளி உதவி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
நிர்வாக சேவையில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி ஜெ. ஸ்ரீபதி , மாவட்டத்தின் காணி நிர்வாகம் மற்றும் அது சார்ந்த அபிவிருத்திப் பணிகளை இனிவரும் காலங்களில் முன்னெடுத்துச் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *