திருகோணமலையில் பள்ளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

திருகோணமலையில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தையொன்று நேற்று(05) உயிரிழந்துள்ளது.

இச் சம்பவத்தில் மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த ஒரு வயது எட்டு மாதங்கள் மதிக்கத்தக்க ஆலியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.​

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டின் அருகே தேங்கியிருந்த அல்லது தோண்டப்பட்டிருந்த நீர் நிரம்பிய பள்ளத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.​

சம்பவம் நடந்த உடனேயே குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி அக்குழந்தை உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *