தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தில் 22 லீற்றர் கசிப்பினை நூதனமான முறையில் பயணப்பையில் மறைத்து எடுத்துச் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கைது இன்று(05) செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி. எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.