கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நிறைவுக்கு வந்தமையை அடுத்து பொலிஸார் வீதிகளில் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள பெனர்கள், கட்டவுட்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றி வருகின்றனர்.
நாளை காலை உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலே குறித்த நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
நாளை காலை 07.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரையில் வாக்கெடுப்பு இடம் பெறவுள்ளது.
வாக்கு எண்ணும் பணிகள் நாளை(06) 4.30மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.