மட்டக்களப்பில் முஸ்லிம் விவாக பதிவாளர்களுக்கான நேர்முகப் பரீட்சை

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் விவாக பதிவாளர்களுக்கான நேர்முக பரீட்சைகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று(06) புதிய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி தெற்கு, காத்தான்குடி மத்தி , ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் ரிதிதென்ன பிரிவிற்கான முஸ்லிம் விவாக பதிவாளர்களுக்கான நேர்முகப்பரீட்சை இடம்பெற்றன.
இந் நிகழ்வில் கிழக்கு வலய பிரதி பதிவாளர் நாயகம் நடராஜா மற்றும் மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ஜெய்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *