தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களில் பாடத்திட்டங்கள் மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கம் அடிப்படையில் பல பிழைகள் இருப்பதால், இந்த விடயத்தில் முறையாகச் செயற்படத் தவறியதால், கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று(07) நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கையொப்பமிடப்பட்டது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முதலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையெழுத்திட்டார்.

