அம்பாறை மாவட்டம் பொத்துவில் ரொட்டை கிராமத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 20 மீனவர் குடும்பங்களுக்கு அம்பாறை மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியத்தினால் உலர் உணவுப்பொதிகள் இன்று(07) வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வானது ரொட்டை கிராம மினவர் சங்கத் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க அம்பாறை மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியத்தின் பொத்துவில் பிரதேச இனணப்பாளர் திரு.சுபாஜினியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளரும் ஆலையடிவேம்பு பிரதேச ஊடகவியலாளருமான திரு.செல்வி விநாயகமூர்த்தி, அமைப்பின் வெளிக்கள இணைப்பாளர் ஆறுமுகம் அசோக்கா, தம்பிலுவில் கிராம சமுக சேவையாளரும் இளம் சமுக ஊடகவியலாளருமான ஜே.கே.யதுர்ஷன், ரொட்டை கிராம மீனவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

