வளமான நாடு அழகான வாழக்கையும் தூய்மையான நகரம் ஆரோக்கியமான வாழ்க்கைத் திட்டத்தின் ஒரு கட்டமாக அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் அரசாங்கத்தின் தேசிய டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தின் கீழ் டெங்கு ஒழிப்பு பரிசோதனை நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தின் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து முன்னெடுத்தது.
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்திக்கு உட்பட்ட சகல தேசிய பாடசாலைகள் உட்பட அனைத்து பாடசாலைகளிலும் இன்று காலை டெங்கு பரிசோதனை இடம்பெற்றது.
டெங்கு குடம்பிகள் காணப்படும் இடங்கள் பரிசோதிக்கப்பட்டு சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பேரிடருக்குப் பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு மூன்று நாள் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
டெங்கு பரிசோதனை திட்டமானது மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். உதயகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
பொது சுகாதார பரிசோதர்கள், வலயக் கல்வி அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


