இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்தனனின் வழிகாட்டலுக்கு அமைவாக நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ராகுலநாயகி சஜிந்ரன் தலமையில் இடம்பெற்றது.

நேற்று(07) இந்நிகழ்வின் ஒருங்கினைப்பினை நாவிதன்வெளி இந்துகலாசார உத்தியோகத்தர்களான நீலேந்திரன், சறோசினி பாலசுந்தரம் மேற்கொண்டதுடன் நிகழ்வு தொடர்பான விளக்கவுரையினை மாவட்ட செயலக இந்துகலாசார உத்தியோகத்தர் ஜெயராஜி நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் சிவம், நிர்வாக கிரிம உத்தியோகத்தர் மனோஜ் இந்ரஜித், ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சுபாஸ்கர் சர்மா, திணைக்கள தலைவர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரிவு தலைவர்கள் மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *