போக்குவரத்து அனுமதிக்கு உதவிய அமைச்சர் ஹந்துநெத்திக்கு மாநகர சபையில் நன்றி தெரிவிப்பு

மட்டக்களப்பு மாநகர சபைக்கு வருமானம் ஈட்டித் தருவதற்கான போக்குவரத்து சேவை ஒன்றின் அனுமதியைப் பெற்று தந்த மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்திக்கு இன்று(08) இடம்பெற்ற மாநகர சபை அமர்வில் முதல்வர் மற்றும் சபை உறுப்பினர்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

மாநகரசபையின் 8 வது சபையின் 11 அமர்வு இன்று(08) மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் காலை 9.30 மணிக்கு சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது மாநகரசபை முதல்வர் விசேடமாக சபைக்கு அறிவித்தார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் அமைச்சருமான சனில் ஹந்துன்நெத்தியிடம் மட்டு  மாநகர சபையால் மட்டக்களப்பு கொழும்புக்கான பஸ் சேவை ஒன்றை நடத்துவதற்கான போக்குவரத்து அனுமதியை பெற்றுத் தருமாறு கடந்த பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கடிதம் மூலம்  கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய அமைச்சர் குறித்த பஸ் போக்குவரத்து சேவைக்கான அனுமதியைப் பெற்றுக்கொடுத்து அதன் அனுமதியை அனுப்பியுள்ளார்.

எனவே அவருக்கு நன்றிகள் என மாநகர சபை முதல்வர் தெரிவித்ததையடுத்து உறுப்பினர்களும் ஏக மனதாக அவருக்கு நன்றிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *