அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆங்கில முன் பள்ளியின் கலை விழா

கிரான் இந்து சமய வளர்ச்சி மன்றத்தினால் நடைமுறைப்படுத்தி வருகின்ற அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆங்கில முன் பள்ளியின் கலை விழாவும் பிரிவுபசார வைபவமும் இன்று மாலை கிரான் மத்திய கல்லூரியில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுடன் நடைபெற்றது.

இதன்போது அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் இறை வணக்கம் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தமிழ் மொழி வாழ்த்துடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டது.

மாணவர்களின் வரவேற்பு நடனம் அரங்கை அலங்கரித்தது.

தலைமையுரையை அன்னை ஸ்ரீ சாரதா தேவி ஆங்கில முன் பள்ளியின் அதிபர் திருமதி வி.ரவிக்குமார் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் சிறப்புரையாற்றினார்கள்.

தொடர்ந்து மாணவர்கள் நினைவு சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

முதலாம் ஆண்டிற்கு செல்லும் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அன்னை ஸ்ரீ சாராதாதேவி முன்பள்ளியின் கல்வி பயின்று 2024.2025 ஆம் ஆண்டில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் முரளிதரன் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக சிவஸ்ரீ பகஜரூபன் சர்மா, கிரான் பிரதேச பாடசாலை அதிபர்களான செல்வசுதேசன், இளங்கோவன் பிரதீபன், ஓய்வு பெற்ற அதிபர் ஜெயவீரரெட்னம் ஆகியோர்களும் சிறப்பு அதிதிகளாக சட்டத்தரணி புருசோத்மன், முன் பிள்ளை பருவ வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *