காரைதீவு மீனவர் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளிற்கு வவுச்சர்கள் வழங்கி வைப்பு

அவுஸ்ரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் காரைதீவு மீனவர் சங்க உறுப்பினர்களின் 18 பிள்ளைகளிற்கு கற்றல் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கான 4000.00 பெறுமதியான வவுச்சர்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அவுஸ்ரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் மட்டுப்படுத்தப்பட்ட அம்பாறை மாவட்டம் காரைதீவு விநாயகர் மீனவர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளில் கல்வி கற்கும் மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் கொள்வனவுக்காக 4000.00 பெறுமதியான வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு சங்கத்தின் செயலாளர் சுஜீதன் தலைமையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்விற்கு அதிதிகளாக அவுஸ்ரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தின் உபதலைவர் அரசரெட்ணம் மகேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

விசேட அதிதியாக அவுஸ்ரேலிய காரைதீவு மக்கள் ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினரான தம்பியப்பா கணேசநாதனும், காரைதீவு செயற்பாட்டுக் குழு உறுப்பினர்களான ரெட்ணகுமாரும், பிரேமானாந்தாவும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

சிறப்பு அதிதியாக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் குமுதினி ஜெகதீசனும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கற்றல் உபகரணங்களிற்கான வவுச்சர்களை பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் உட்பட மீனவர் சங்க நிர்வாக சபை உறுப்பினர்களோடு ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மேற்படி உதவியினை வழங்க நிதி உதவி வழங்கிய காரைதீவினை பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியாவினை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியமுக்கும் அவரது குடும்பத்தினருகும் விசேட மீனவர் சங்கத்தினரால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *