டித்வா புயலினால் பாதிக்கப்பட்டிருந்த உயர்தர பரீட்சைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றம் காரணமாக தடைப்பட்டிருந்த கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று காலை மனைப்பொருளியல் மற்றும் கலைப்பிரிவு பாடங்களுக்கான பரீட்சைகள் இன்று இடம்பெற்றன.
அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைய அடை மழையினால் பாதிக்கப்படுகின்ற பகுதிகளுக்குத் தேவையான முன் ஆயத்தப் பணி அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது.
மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் காரணத்தினால் பரீட்சார்த்திகளை நேர காலத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு சமூகம் தருமாறு வலயக்கல்வி அலுவலகம் பரீட்சைக்குத் தோன்றும் மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


