நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதால் காய்கறிகளின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் மரக்கறி விலைகள் எதிர்பாராதளவுக்கு உயர்ந்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். பொருளாதார மத்திய நிலையங்களில் விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகளின் சந்தை நிலவரம் வெளியாகியுள்ளது.
பச்சை மிளகாய்
அதன்படி, தம்புள்ளை மற்றும் கெப்பெட்டிபொலவில் 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி ஒரு கிலோகிராம், நுவரெலியாவில் 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கறிமிளகாய் ஒரு கிலோகிராம் நுவரெலியாவிலும் கெப்பெட்டிபொலவிலும் 600 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிறையில், தம்புள்ளையில் 500 ரூபாய் முதல் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பச்சை மிளகாய் ஒரு கிலோ, கெப்பெட்டிபொலவில், 650 ரூபாய் முதல் 900 ரூபாய் வரைக்கும், தம்புள்ளையில், 700 ரூபாய் முதல் 800 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம்
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், பச்சை மற்றும் சிவப்பு குடை மிளகாய் 900 ரூபாய்க்கும், மஞ்சள் குடை மிளகாய் ஆயிரத்து 500 ரூபாய் வரைக்கும் விற்பனையாகியுள்ளது.
இதேவேளை, காலிஃபிளவர் 950 ரூபாய்க்கும் ப்ரோக்கோலி 1,200 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.
அத்துடன், கெப்பெட்டிபொலவில் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒருகிலோ காலிஃபிளவர் தம்புள்ளையில் 590 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், நுவரெலியா கரட் 250 ரூபாய் முதல் 330 ரூபாய் வரைக்கும், யாழ்ப்பாண கரட்
யாழ்ப்பாண கரட் 300 ரூபாய் முதல் 330 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோவா ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், போஞ்சி ஒரு கிலோ 500 ரூபாய்க்கும், லீக்ஸ் ஒரு கிலோ 300 ரூபாய்க்கும், நுவரெலியா பீட்ரூட் 520 ரூபாய்க்கும் தம்புள்ளையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியாவில், கோவா ஒரு கிலோ 180 ரூபாய்க்கும் கரட் ஒரு கிலோ 330 ரூபாய்க்கும், லீக்ஸ் ஒருகிலோ 300 ரூபாய்க்கும் மற்றும் பீட்ரூட் ஒருகிலோ 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கெப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தில், போஞ்சி ஒரு கிலோ 400 முதல் 450 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 500 ரூபாய் முதல் 600 ரூபாய்க்கும் கோவா ஒரு கிலோ 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரைக்கும் மற்றும் கரட் ஒரு கிலோ 220 ரூபாய் முதல் 300 ரூபாய் வரைக்கும் விற்பனையாகியுள்ளது.

