மாணவர்களுக்கான இலங்கை சர்வதேச தரப்படுத்தல் பயிற்சி முகாம்

ஐக்கிய கூட்டணி ஷோட்டோ கராத்தே டோ(இலங்கை) சங்கத்தின் ஏற்பாட்டில் தம்புள்ள ரன்கிரி தேசிய பாடசாலையில் மாணவர்களுக்கான இலங்கை சர்வதேச தரப்படுத்தல் பயிற்சி முகாம் நேற்று முன்தினம்(11) இடம்பெற்றது.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

மட்டக்களப்பபு மாவட்டத்தில் வாழைச்சேனை ஜப்பான் கராத்தே சோடோகன் படிப்பு சங்க மாணவர்களும் பங்கு பற்றியிருந்தனர்.

இப்பயிற்சியினை அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த சர்வதேச பயிற்றுவிப்பாளர் அபு சுஃபியான் ஹைதர், சென்செய் கலந்து கொண்டு பயிற்சி வழங்கியிருந்தார்.

இதன்போது பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *