நாளை(15) பொங்கல் திருநாளை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச மத்திய சந்தையில் ஆடைகள் மற்றும் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான அதிகளவான மக்கள் கூட்டம் அலைமோதுகின்றன.
இம்முறை அதிகளவான கடைகள தம்பிலுவில் மத்திய சந்தையினுள் வருகை தந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
அதே போன்று மக்களும் பொருட்களைக் கொள்வனவு செய்யும் வேகமும் வருகையும் அதிகரித்து காணப்படுகின்றது.
பொருள்களின் விலைகளும் குறைவாக காணப்படுகிறன.
அத்துடன் நாளை விநாயகபுரம் முகத்துவாரத்தில் முற்றவெளியில் விநாயகபுரம் பொது மக்கள் மற்றும் விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பின் அனுசரனையில் மாபெரும் பட்டத்திருவிழா மற்றும் ஸ்ப்தஸ்வரம் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வுகள் யாவும் நாளை மாலை 03.00 மணி முதல் இடம்பெறவுள்ளதுடன் விநாயகபுரத்தைச் சேர்ந்த சீ தமிழ் சரிகமபா பாடகர் சபேஷனை கௌரவிக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

