உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் பொதுமக்கள் பொருட்களை இன்று(14) கொள்வனவு செய்து வருகின்றனர்.
வர்த்தக நிலையங்களிலும், ஏனைய வியாபார ஸ்தலங்களிலும் வியாபாரம் களைகட்டிய நிலையில் மக்கள் புத்தாடைகளையும், ஏனைய வீட்டுப் பாவனைப் பொருட்களையும், மண்பானை, மண்சட்டி போன்ற பொங்கலுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதைக் காண முடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தெகுதியில் படுவான் கரைப் பிரதேசத்தையும், எழுவான் கரையையும் இணைக்கும் பிரதான நகரமாக களுவாஞ்சிக்குடி நகர் பிரதான வர்த்தக நிலையமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

