மின்சார வேலியில் சிக்கி கணவன் மற்றும் மனைவி உயிரிழப்பு

கேகாலையில் வரக்காபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுனுவல பகுதியில் உள்ள காணி ஒன்றில் மின்சார வேலியில் சிக்கி கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று(13) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக காணியில் பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கியே கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஹுனுவல, துல்ஹிரிய பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய கணவனும் 58 வயதுடைய மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *