கண்டி மாவட்டத்தில் 21சத வீத வாக்குகள் பதிவு

கண்டி மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று(06) மிகவும் மந்த கதியில் பதிவாகி வருவதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்தார்.

 

சராசரி 20 சதவீததிற்கும் குறைவான வாக்குகளே பதிவாகின. நண்பகல் 12 மணிக்கு பிறகே மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க ஆர்வம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இருப்பினும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக வாக்குப்பதிவுகள் இடம் பெறுகின்றன. தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

 

இதேவேளை, கண்டி மாவட்டத்தின் வாக்கெடுப்பு வீதம் 21 சத வீதமாக இருந்ததாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *