பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி காலை 8 மணி முதல் 24 மணிநேர பணிபுறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுமென அந்த சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
பணிபுறக்கணிப்பு தொடர்பான எழுத்துப்பூர்வ அறிவிப்புகள் இரண்டு சந்தர்ப்பங்களில் சுகாதார அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், சாதகமான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையிலேயே, தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு சங்கம் முடிவு செய்ததாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

