வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலையில் தரம் 6 மாணவர்களை வரவேற்றல்

புதிய கல்வி ஆண்டில் தரம் – 6 இல் வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலையில் இணைந்து கொண்ட புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று(21)  பாடசாலையின் கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் அன்வர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் முபாறக், ஹைராத் வித்தியாலய அதிபர்கள், அந்நூர் தேசிய பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பிரதம அதிதியைக் கெரவித்து அந்நூர் தேசிய பாடசாலை அதிபரினால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை புதிதாக இணைந்து கொண்ட மாணவர்கள் பூ மாலை அணிவித்து, இனிப்புப் பண்டங்கள் வழங்கி வரவேற்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.

தரம் 06ல் இணைந்து கொள்ளும் புதிய மாணவர்களுக்கான வகுப்பறையும் திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *