அல் ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு ரூ. 60 மில்லியன் நிதி ஒதுக்கீடு

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம்காரியப்பரின் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் பரிந்துரைக்கிணங்க, கொழும்பு 10, ஶ்ரீ தம்மத்த மாவத்தையில் அமைந்துள்ள அல் ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு இரண்டு மாடி கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக ரூ. 60 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, பாடசாலை அதிபர் திரு. எம். எஸ். ஜெஸ்மின் தலைமையில் ஆசிரியர் குழாம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இணைந்து, குறித்த நிதி ஒதுக்கீட்டிற்காக நன்றி தெரிவித்ததுடன், பாடசாலையை சார்ந்த பல்வேறு தேவைகள் மற்றும் விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர்களான அர்சாத் நிசாம்தீன் மற்றும் ரியாஸ் கபூர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இச் சந்திப்பு, இன்று மாலை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *