யாசகப் பெண்ணை கொடூரமாகக் கொலை செய்த இளைஞன் கைது

கண்டியில் துட்டகைமுனு மாவத்தை பகுதியில் இளைஞன் ஒருவன், யாசகப் பெண் ஒருவரை கொடூரமாகக் கொலை செய்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று(23) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான இளைஞன் கண்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாசகப் பெண்ணுக்கும் இளைஞனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *