நாமல் ராஜபக்க்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷவுக்கு எதிரான பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்கின் விசாரணை இன்று(29) கொழும்பு தலைமை நீதிவான் அசங்க போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, நாமல் ராஜபக்க்ஷ உட்பட நான்கு சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இது தொடர்பாக சட்டமா அதிபரிடமிருந்து இதுவரை எந்த அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை என்று குற்றப் புலனாய்வுத்துறை நீதிமன்றத்துக்குத் தெரிவித்தது.

இதனையடுத்து, வழக்கை ஜூலை 30 ஆம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதிவான், அன்றைய தினம் அறிவுறுத்தல்கள் குறித்த சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *