மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறந்து வைப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் மாவை சேனாதிராசாவின் ஓராண்டு நினைவை முன்னிட்டு அன்னாரின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் இன்று(31) திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி வணக்கம் செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *