பொலிஸாரின் சமிக்கையை மீறிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு

கிளிநொச்சி  மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து சட்ட விரோதமான முறையில் இன்று(01) அதிகாலை 3.00க்கு அனுமதிப் பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை தர்மபுரம் பொலிஸார் வீதிச் சோதனை இட முற்பட்ட பொழுது சமிக்கையை மீறிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் டிப்பரின் எரிபொருள் தாங்கி மற்றும் டயர் என்பன பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் சாரதி தப்பி ஓடி உள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *