இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் இன்று(03) அதன் விலை 12,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, ஒரு பவுண் 24 கரட் தங்கம் 380,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 349,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.

 

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,737 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *