வவுனியா- வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மாணவன் ஒருவர் இன்று(06) உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிளில் நேற்று(05) இரு மாணவர்கள் பயணித்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்தில் வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கரிஸ்ணன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கெண்டு வருகின்றனர்.

