விசேட காணி மத்தியஸ்த சபையின் தவிசாளராக சிவகௌரி நியமனம்

வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபையின் புதிய உறுப்பினர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(06) வவுனியா மாவட்ட செயலகத்தில் காலை 9:30 மணியளவில் நடைபெற்றது.

வவுனியா மன்னார் மாவட்ட மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர்
செல்லத்துரை விமல்ராஜ் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது

மத்தியஸ்சபை நியமனம் வழங்கும் இந் நிகழ்வில் தவிசாளர், உதவி தவிசாளர் உட்பட 23 மத்தியஸ் சபை மத்தியஸ்களுக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும், சிறப்பு அதிதியாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *