யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் “யாழ்ப்பாணம் – நாள் சத்திர சிகிச்சை நிலையம்” நேற்று(06) திறந்து வைக்கப்பட்டது.
யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த யாழ்ப்பாணம் நாள் சத்திரசிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம், போதனா வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச அமைப்புகளான ஐஎம்எச்ஓ, ஜேஎம்எப்ஓஏ மற்றும் புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப விழாவில் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

