யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ரூ 2.5 மில்லியன் செலவில் தானியங்கி நீர் விநியோக மையம் திறந்து வைக்கப்பட்டு உத்தியோகப்பூர்வமாக மருத்துவமனை நிர்வாகத்திடம் நேற்று(08) கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் தலைமையில் மருத்துவனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வடமராட்சியில் 1992 ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை அணியினரின் நிதிப்பங்களிப்பில் அமைக்கப்பட்ட தன்னியக்க கட்டுப்பாட்டு முறையிலான நீர் விநியோக தொகுதி கையளிக்கும் நிகழ்வில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அதிகாரிகள், தாதியர், மருத்துவமனை உத்தியோகத்தர்கள் மற்றும் வடமராட்சியில் 1992 ம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை அணியினரின் என பலரும் கலந்து கொண்டனர்.

