நவீன விவசாய முயற்சியில் பயிரிடப்பட்ட பச்சை மிளகாய்ச் செடிகளின் அறுவடை நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நவீன விவசாய முயற்சியின் பகுதியாக பயிரிடப்பட்ட பச்சை மிளகாய்ச் செடிகளின் விளைச்சலின் மற்றுமோர் அறுவடை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
அலுவலகச் சூழலை பசுமையாக்கி, ஊழியர்களின் மனநலன் மற்றும் பணித்திறனை மேம்படுத்தும் நோக்கில், நலன்புரிச்சங்கம் தொடர்ச்சியான விவசாய நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.
ஆரம்பக் கட்ட முயற்சியின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக நவீன முறையில் பச்சை மிளகாய் பயிரிடப்பட்டு, திட்டமிட்ட பராமரிப்பு மற்றும் கண்காணிப்புடன் வளர்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *