அமைச்சர் சுசில் ரணசிங்ஹ இரணைமடுக்குளத்திற்கு விஜயம்

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்ஹ நேற்று(11) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

 

கிளிநொச்சி இரணைமடுக்குளத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் குளத்தை பார்வையிட்டார்.

 

தொடர்ந்து காக்கா கடைச்சந்தியிலுள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் நவீன நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் தொடர்ந்து குறித்த அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட பதினைந்து இலட்சம் ரூபா வீடமைப்பு செயற்பாடுகளை விவேகானந்த நகர் பகுதியில் பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *