கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் துறைசார்ந்த மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் அமைச்சின் செயலாளர் அஸ்மி தலைமையில் நேற்று(12) திருகோணமலை விவசாய அமைச்சில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் பங்கேற்புடன் இடம்பெற்ற அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டத்தில் அமைச்சும், அமைச்சுடன் இணைந்த 6 நிறுவனங்களின் முன்னேற்ற நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதில் காணி நிர்வாகத் திணைக்களம், விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு மற்றும் மீன்பிடிப் பிரிவு போன்ற திணைக்களங்களின் கிழக்கு மாகாண பணிப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் கலந்து கொண்டு குறித்த விடயம் தொடர்பில் விளக்கங்களை வழங்கி வைத்தனர்.

